» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்பு: மேலும் மீட்புப் பணிகள் தீவிரம்

திங்கள் 9, ஜூலை 2018 12:50:47 PM (IST)

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியவர்களில் 6 சிறுவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்ததாவது: குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முடுக்கி விடப்பட்டன. அதன் பயனாக, தற்போது ஆறு சிறுவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மீட்கப்பட்ட ஆறு சிறுவர்களின் பெயர்கள் குறித்த விவரங்களை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை. 

இதனிடையே, குகைக்குள் சிக்கிய ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் குறைந்தபட்சம் 10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக மீட்பு குழு கமாண்டர் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் 12 சிறுவர்களை அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட அந்த 13 பேரும் சென்றபோது திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் மாட்டிக் கொண்டனர். தற்போது அதில் 6பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


மக்கள் கருத்து

nanbanJul 10, 2018 - 06:42:02 PM | Posted IP 162.1*****

அதனை பேரும் மீட்கப்பட்டு உள்ளனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory