» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: 10 பேர் பலி - 73 பயணிகள் படுகாயம்!!

திங்கள் 9, ஜூலை 2018 12:03:45 PM (IST)



துருக்கி நாட்டின் டெகிர்டாக் வடமேற்கு மாகாணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 73 பேர் படுகாயமடைந்தனர்

துருக்கியிலுள்ள எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் டெகிர்டாக் வடமேற்கு மாகாணத்தில் சரிகார் கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும் போது ரயில் திடீரென கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 73 பயணிகள் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பதற்காக 100 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் ஏர் ஆம்புலன்களும் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூற்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory