» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தந்தையின் உடலை அடக்கம் செய்ய ரூ.66 லட்சம் காரை சவப்பெட்டியாக மாற்றிய மகன்!!

புதன் 13, ஜூன் 2018 12:26:52 PM (IST)



நைஜீரியாவில் தந்தையின் உடலை அடங்கம் செய்வதற்காக புதிதாக வாங்கிய பிஎம்டபிள்யூ காரை  சவப்பெட்டியாக மாற்றி தொழிலதிபர் ஒருவர் அடக்கம் செய்தார். 

நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி  பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி. தொழிலதிபரான இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். அண்மையில் அசுபுயுகியின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி அவரின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்துள்ளது அந்தப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அசுபுயுகியின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ  காரின் மதிப்பு 66,000 டாலர் (ரூ.66 லட்சம்) ஆகும். உடலை புதிய பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அவர் முன்னரே கூறியிருந்ததாகவும், தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் அசுபுயுகி கூறியுள்ளார்.விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ  கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து

சாமிJun 13, 2018 - 02:53:52 PM | Posted IP 162.1*****

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory