» செய்திகள் - விளையாட்டு » உலகம்

திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு புற்றுநோய் பாதிப்பு: அமெரிக்க நாளிதழ்கள் தகவல்!!

செவ்வாய் 12, ஜூன் 2018 12:23:03 PM (IST)

திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைவரான தலாய் லாமாவுக்கு புற்றுநோய் பாதித்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தலாய் லாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமாவின் உடல்நிலை மற்றும் நோய் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், சீன அரசுக்கு தற்போது தான் இந்த தகவல் தெரிய வந்திருப்பதாக "தி குவெண்ட்" என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே சமயம், தலாய் லாமாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளை திபெத்திய மத்திய நிர்வாகம் (சிஏடி) மறுத்துள்ளது. 

வயோதிகம் காரணமாகவே, அவரது பொதுமக்களுடனான சந்திப்புகளும், பயணங்களும் குறைக்கப்பட்டிருப்பதாகவும், அச்சுறுத்தும் எந்த நோயும் தாக்கப்படவில்லை என்றும் அது தெரிவிக்கிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தலாய் லாமாவுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கி, தற்போது மயோ கிளினிக்கில் புரோடான் பீம் தெரபி சிகிச்சை  பெற்று வருகிறார். அவரது புற்றுநோய் இதர பகுதிகளுக்கும் பரவி, சரி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவில் வெளியாகும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory