» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கனில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலி

திங்கள் 14, மே 2018 12:39:20 PM (IST)



ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில்,  ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்திலுள்ள ஜாலாலாபாத் நகரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இதில் குண்டுவெடிப்பை நடத்திய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த 4  நபர்கள் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மே 9 ஆம் தேதி ஆப்கன் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory