» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : காட்மண்டு முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம்

சனி 12, மே 2018 4:20:41 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் காட்மண்டு நகர் அருகிலுள்ள முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்றார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் மேற்கொண்ட இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-அமைச்சர் லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார். நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். 

இந்நிலையில், காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார்.  அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.  கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்பு அவர் முக்திநாத் கோவிலில் சாமி கும்பிட்டார்.  அவர் இறைவன் முன் அமர்ந்த நிலையில் பூக்களை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் வெளியே வந்த அவர் அந்நாட்டின் பாரம்பரியமிக்க டிரமை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று அவர் வழிபடுகிறார்.  பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory