» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

சனி 12, மே 2018 9:08:36 AM (IST)

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.  

இந்நிலையில் ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.  ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.  அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.  இதுபற்றி தொலைபேசி வழியே இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.  

அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தி ஒன்றில், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதல் போக்கை சிறந்த முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

Humanமே 12, 2018 - 04:27:26 PM | Posted IP 141.1*****

சூப்பர் ஜி ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory