» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மே 18-ம் தேதி தமிழின அழிப்பு நாள்: இலங்கையின் வடக்கு மாகாண சபையில் பிரகடனம்

வெள்ளி 11, மே 2018 4:26:33 PM (IST)

இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ம் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அனந்தி சசிதரன், மே 18 தமிழின அழிப்பு நாள் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், உலகத் தமிழர்கள் அனைவரும் மே18-ந் தேதியை இன அழிப்பு நாளாக கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதை வடக்கு மாகாண சபை முழு மனதாக ஏற்றுக் கொள்வதாக வடக்கு மாகாண சபைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறும் வகையில் அம்பாறை திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரம் அருகே போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தலைவி செல்வராணி தலைமையில் ஒன்று கூடல் நடைபெற்றது. அப்போது, இனியொரு முள்ளிவாய்க்கால் எமது இலங்கையில் இடம்பெறக்கூடாது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை ஆதரித்து நாங்களும், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஆதரவினையும் தெரிவிப்பதற்காகவே இந்த ஒன்று கூடலை நடத்தியிருக்கின்றோம் என செல்வராணி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory