» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: டிரம்ப் மறுப்பு

வெள்ளி 11, மே 2018 11:33:13 AM (IST)

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். 

வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்  ஆகிய இருவரும் வரும் ஜூன் 12 ஆம் தேதி, நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை வடகொரியா விடுவித்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

வடகொரிய நாட்டுத் தலைநகர் பியாங்கியாங்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டு இருந்தனர். வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியான ஆண்ட்ரூஸ் கூட்டு விமான படைதளத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அந்த 3 கைதிகளையும், அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேரில் சென்று வரவேற்றனர்.அப்போது பேசிய டிரம்ப், 3 கைதிகளையும் விடுவித்தமைக்காக கிம் ஜோங்-உன்னுக்கு நன்றி கூறினார்.

இந்த நிலையில், இண்டியானா மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர், தனது செயல் மூலம் தனது நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை செய்துள்ளார். வடகொரியாவால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் மிகவும் கண்ணியத்தோடு வந்துள்ளனர். இவர்களை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால், ஒபாமா அரசு  1.8 பில்லியன் டாலர் தொகையை ஈரானுக்கு கொடுத்து 5 அமெரிக்க கைதிகளை விடுவித்தது” என்று குற்றம் சாட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory