» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மலேசியாவில் ஆட்சி மாற்றம் : 61 ஆண்டு கால தேசியக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது

வியாழன் 10, மே 2018 10:57:20 AM (IST)மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிசன் தேசியக் கூட்டணிக்கும், மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், வாக்குப்பதிவை தொடர்ந்து நேற்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில் எதிர்கட்சி வேட்பாளரான மகாதீர் முகமது கூட்டணி 115 இடங்களை வென்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. மலேசியப் பிரதமராக 92 வயது மகாதீர் முகமது இன்று பதவியேற்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory