» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்ததம் ரத்து: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

புதன் 9, மே 2018 11:44:34 AM (IST)

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்ததம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரஹானியும் தக்க பதிலடி அளித்து வந்தார். அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் அது அந்நாட்டின் வரலாற்று தவறாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் ஈரானுடன் செய்துக் கொண்ட அணுஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இதற்கான பதிவேட்டிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, "இந்த குறைபாடுடைய சிதைவடைந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தயாரிக்கும் அணுகுண்டுகளை நாம் தடுக்க முடியாது. ஈரானுடனான ஒப்பந்தத்தில் குறைபாடு உள்ளது. நாம் ஒன்றும் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஈரான் ஒப்பந்தத்தில் கதை புனையப்பட்டிருக்கிறது. ஒரு கொடூரமான ஆட்சி சமாதானமாக அணுஆயுத ஒப்பந்தத்தை மட்டுமே விரும்புகிறது.

ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தின் மூலம் பொய் கூறியுள்ளதை சமீபத்தில் இஸ்ரேல் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. ஈரானுக்கு அணுஆயுத வழங்கும் பிற நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்" என்றார். ட்ரம்பின் முடிவு குறித்து ஈரான் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, அணுஆயுத ஒப்பந்தம் இன்னும் இருக்கிறது என்று நம்புகிறேன். இது ஒரு உளவியல் போர், இதில் டிரம்ப் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்" என்று அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory