» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் 16 அமைச்சர்கள் நீக்கம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி நடவடிக்கை!!
வெள்ளி 13, ஏப்ரல் 2018 4:23:00 PM (IST)
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 16 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே கடந்த 4-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர். இருந்தும் அவர் தனது கட்சி மற்றும் மைனாரிட்டி கட்சிகளின் எம்.பி.க்களின் வாக்குகளை பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வி அடைய செய்தார்.
இதையடுத்து கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரவையை மாற்றியமைக்க அதிபர் சிறிசேனாவும், பிரமதர் ரணில் விக்ரம சிங்கேவும் முடிவு செய்தனர். அப்போது ரணில் விக்ர மசிங்கே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 16 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.அவர்களில் 6 பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் 10 பேர் இணை மற்றும் துணை அமைச்சர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். அதிபர் சிறிசேனாவின் தலைமையின் கீழ் செயல்பட போவதாகவும், ராஜபக்சேவை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு: இந்தியா மங்கோலியா இடையே ஒப்பந்தம்
வியாழன் 26, ஏப்ரல் 2018 1:11:08 PM (IST)

இந்தோனேசியாவில் 17 கோடி டாலர்கள் ஊழல்: முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை
புதன் 25, ஏப்ரல் 2018 12:53:27 PM (IST)

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறில் தீ விபத்து: 10 பேர் பலி
புதன் 25, ஏப்ரல் 2018 12:47:49 PM (IST)

அமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தமிழ் விழா: ஜூன் 29-ம் தேதி தொடக்கம்
செவ்வாய் 24, ஏப்ரல் 2018 4:02:30 PM (IST)

சீனாவில் ஊழியர் இன்றி தானாக இயங்கும் வங்கி: அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிப்பு
செவ்வாய் 24, ஏப்ரல் 2018 3:51:51 PM (IST)

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட்மிடில்டன் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது
திங்கள் 23, ஏப்ரல் 2018 7:01:43 PM (IST)
