» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் சீன நிர்வாக இயக்குனர் படுகொலை: சீனாவின் பொருளாதார பாதை திட்டத்துக்கு சிக்கல்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 2:41:28 PM (IST)

பாகிஸ்தானில் சீன நிர்வாக இயக்குனர் படுகொலை செய்யப்பட்டதால் சீனா-பொருளாதார பாதை திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கராச்சியில் 1994ம் ஆண்டு முதல் ஷாங்காயை சேர்ந்த காஸ்கோ ஷிப்பிங் லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பாகிஸ்தான் பிரிவு நிர்வாக இயக்குனராக சீனாவை சேர்ந்த சென் ஜு ( 46) பணியாற்றி வந்தார். கடந்த 5ம் தேதியன்று மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்ற சென் ஜு மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தான் போலீசார் இந்த வழக்கை தீவிரவாத ஒழிப்பு பிரிவுக்கு மாற்றினர். இருப்பினும் இதுவரை சென் ஜு படுகொலை  செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

பாகிஸ்தானில் தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது சீனாவுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தா னிடம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி சீனா வலியுறுத்தியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங்கின் உயர்ந்த லட்சியமான பட்டு சாலை திட்டத்தின் துணை திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் சீனா பாகிஸ்தானில் 5000 கோடி டாலர் முதலீடு செய்கிறது. தற்போது பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் இந்த திட்டத்துக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory