» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் ராஜபக்சே வலியுறுத்தல்!!

திங்கள் 12, பிப்ரவரி 2018 3:49:43 PM (IST)

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் பெருவாரியான இடங்களில் தங்களது கூட்டணி வென்றுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். 

இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தன்னுடைய வலுவான களங்களான கொழுப்பு பிரதேசத்தில் பல இடங்களை பெரமுனா கூட்டணியிடம் இழந்தது. இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே, "சிறிசேனா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. இனியும் இந்த அரசு தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பளித்துவிட்டனர்” என பேட்டியளித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்திற்கு உடனே தேர்தல் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்க வேண்டும் என இலங்கை சுதந்திரா கட்சியில் குரல் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory