» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்ய விமான நொறுங்கி விழுந்த விபத்தில் 6 விமான பயணியாளர்கள் உள்பட 71 பேர் பலி

திங்கள் 12, பிப்ரவரி 2018 9:45:32 AM (IST)ரஷ்யாவில் மாஸ்கோ நகர் அருகே விமான நொறுங்கி விழுந்த விபத்தில் 6 விமான பயணியாளர்கள் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் பலியாகினர்.

ரஷ்யாவை சேர்ந்த சரோடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெற்கு ரஷ்யாவில் சரோடோவ் மத்திய விமான நிலையத்தை மையமாக கொண்டு 35 நகரங்களுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது. இதில்  மாஸ்கோ-உரல் வழித்தடமும் அடங்கும். சரோடோவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தி அனடோனோவ் அன் 148 விமானம் நேற்று 6 விமான பணியாளர்கள்; மற்றும் 65 பயணிகளுடன் மாஸ்கோவிலிருந்து உரல் நகருக்கு கிளம்பி சென்றது. விமானம் நிலையத்திலிருந்து கிளம்பி சென்ற 4வது நிமிடத்திலேயே அந்த விமானம் ரேடாரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியது.

இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த விமானம் மாஸ்கோவின் புறநகர் பகுதியான அர்குனோவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற சுமார் 150க்கும்; மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் 71 பேரும் உயிர் இழந்தனர். இந்த விமான விபத்து குறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில் இந்த விபத்தில் 65 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இறந்துள்ளனர். இந்த விமான விபத்து காலநிலை மற்றும் மனித தவறுகளால் நடைபெற்று இருக்கலாம் என்று தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory