» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் நாட்டு ஆளில்லா விமான தாக்குதல்: இஸ்ரேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சனி 10, பிப்ரவரி 2018 5:40:39 PM (IST)

ஈரான் நாட்டு ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் ஜெட் விமானம் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆசாத்துக்கு எதிராக வன்முறையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஐ.எஸ். அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். சிரியா நாட்டில் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் போரிட்டு வருகின்றன.  

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஈரான் நாட்டு படைகளும் போரிட்டு வருகின்றன. சிரியாவுக்கு ஈரான் அரசு ஆதரவு தெரிவிப்பதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இஸ்ரேல் வான்வெளி மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைகின்றன என சமீப வாரங்களில் இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், சிரியா நாட்டில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆளில்லா விமானங்கள் இஸ்ரேல் வான்வெளியில் பறந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டு ராணுவம் இன்று பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலின் எப்.16 ரக போர் விமானங்கள் தனது வான்வெளியில் வைத்து ஈரான் நாட்டின் ஆளில்லா விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தின.  இதில் எப்.16 ரக ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.  இந்த தாக்குதலில் போர் விமானத்தில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory