» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல்

ஞாயிறு 14, ஜனவரி 2018 4:31:04 PM (IST)

இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும் என  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாகிஸ்தான் பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.

பாகிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறி இருப்பதாவது: இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணு ஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.  பாகிஸ்தான் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.அந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாகிஸ்தான் , தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory