» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராஜபக்சே கவனத்தை ஈர்ப்பதற்காக ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது: அதிபர் சிறிசேனா ஒப்புதல்

திங்கள் 13, நவம்பர் 2017 12:32:26 PM (IST)

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது. இலங்கையில் அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே அரசு, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்று இலங்கை அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இறுதிக்கட்டப்போரின்போது அரசியல்வாதிகள் கட்டளையை ஏற்று செயல்பட்ட சில ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். சிறிசேனா மேலும் கூறும் போது, ஆட்சியில் இருந்தவர்களின் (ராஜபக்சே) கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை ராணுவ வீரர்களில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைசட்டவிரோதமானது, ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. போரில் நாட்டுக்காக சண்டையிட்டவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இதை நிராகரிக்கிறேன். ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது. அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று செயல்பட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடப்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போது விசாரணையில் உள்ளவர்கள், குற்றம் செய்யவில்லை என்று தெரியவந்தால் விடுவிக்கப்படுவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory