» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா-ரஷியா இடையிலான நல்லுறவு மிகவும் அவசியம்: அதிபர் டிரம்ப் ட்விட்

ஞாயிறு 12, நவம்பர் 2017 9:40:01 PM (IST)

அமெரிக்கா-ரஷியா இடையிலான நல்லுறவு மிகவும் அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அணு ஆயுதம் மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவிற்கு எதிரான தடைகளை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து டிரம்ப் பதிவுசெய்த டுவிட்டில்,”கிம் ஜாங் உன் என்னை வயதானவன் என கூறி கிண்டல் செய்துள்ளார். நான் அவரை குள்ளமான மற்றும் குண்டான நபர் என ஒருபொழுதும் கூறாத நிலையில் அவர் இப்படி கூறி என்னை அவமானப்படுத்தியுள்ளார். நான் அவருடைய நண்பராக கடும் முயற்சி செய்துவருகிறேன். அது ஒருநாள் நடைபெற கூடும்” என டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில்,”ரஷியாவுடன் நல்ல உறவை வைத்திருப்பது ஒரு நல்ல விஷயமாகும். அது கெட்ட விஷயம் இல்லை. இதனை எப்போது, முட்டாள்கள் மற்றும் வெறுப்பாளர்கள் உணரப்போகிறார்கள்?. அவர்கள் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இது நம் நாட்டிற்கு மிகவும் தீயது. வடகொரியா, சிரியா, உக்ரைன் நாடுகளில் உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க ரஷிய உதவி மிகவும் அவசியம்” என்று அதிபர் டிரம்ப் பதிவுசெய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory