» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகின் மிகப்பெரிய பஞ்சத்தால் அழியப்போகும் நாடு எது ? : ஐநா அதிகாரி அதிர்ச்சி தகவல்

வியாழன் 9, நவம்பர் 2017 8:36:42 PM (IST)



உலகின் மிகப்பெரிய பஞ்சத்தால் ஏமன் நாடு அழியப் போவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

சௌதி தலைநகர் ரியாத் நோக்கி ஹூதி போராளிகள், பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனை இடைமறித்து வானில் அழிக்கப்பட்டது.இதையடுத்து ஏமன் நாட்டிற்கு செல்லும் வான், தரை மற்றும் கடல் பாதைகளை சௌதி படைகள் அடைத்துவிட்டன. போராளிகளுக்கு ஈரான் ஆயுதம் அனுப்புவதை நிறுத்தும் நோக்கில் பாதைகள் அடைக்கப்பட்டதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக் கூறுகையில், போரினால் ஏமன் நாடு ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் மீதான முற்றுகையை தளர்த்திக் கொள்ளுமாறு சௌதி தலைமையிலான கூட்டணிக்கு வலியுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.ஏமனுக்கு உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால், உலகில் இதுவரை காணாத பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory