» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூஜெர்சி மாகாணத்தில் மேயர் பதவிக்கு சீக்கியர் தேர்வு: அமெரிக்காவில் முதல்முறை!!

வியாழன் 9, நவம்பர் 2017 9:04:41 AM (IST)



அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின்  நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் பட்டமும் பெற்றார். 

நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் ஜூரியாக (நடுவராக) இருந்து வந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு மேலாக நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார். சமீபத்தில் அவரது காரில் யாரோ சமூக விரோதிகள் அவரை பயங்கரவாதி என சித்தரிக்கும் வாசகங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் ஹோபோக்கன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, "நன்றி ஹோபோக்கன். உங்கள் மேயராக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி” என ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory