» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐதராபாத்தின் முக்கிய சாலைகளில் ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படம். பெண்கள் அமைப்பு கண்டனம்!!!

திங்கள் 17, மார்ச் 2014 11:38:05 AM (IST)அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த ரேஸ் குர்ரம் என்ற படத்தின் கவர்ச்சியான போஸ்டர் ஒன்று, ஆந்திர தலைநகர் ஐதராபாத் முழுவதிலும் சுவரில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை ஐதராபாத்தின் பல சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 
ரேஸ் குர்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நாளை இந்த விழா நடக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசனோடு சலோனி என்ற நடிகை முக்கிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேந்திர ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை நல்லம்பலு ஸ்ரீநிவாஸ் என்பவர் தனது லட்சுமி நரசிம்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.
 
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதுபோன்ற மிகவும் கவர்ச்சியான போஸ்டர்களை போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் ஒட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பெண்களை ஆபாசமாக காட்டியிருப்பதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Guru HospitalThoothukudi Business Directory