» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் எனக் கூறிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி: உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 12:37:08 PM (IST)



பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.

அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு வழக்கில் அஜரான பெண் வழக்கறிஞரை பார்த்து, எதிர்க்கட்சி பற்றி வழக்கறிஞருக்கு நிறைய தெரியும் என்று தோன்றுகிறது. அதனால் அவர்களின் உள்ளாடைகளின் நிறத்தை அவளால் வெளிப்படுத்த முடியும் என வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இது தொர்பாக விளக்கம் அளிகக் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory