» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க தூதரகம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:21:34 PM (IST)
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடந்த 9 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளது.
கடந்த 2019 முதல் 2022 ஆண்டிகளை ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வேலை, படிப்பு, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு நுழைவு இசைவு பெற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஆனால், இந்தாண்டு இன்னும் 3 மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில், 10 லட்சம் நுழைவு இசைவு என்ற இலக்கை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அடைந்துள்ளன.
இதில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் படிப்பை மேற்கொள்ள செல்லும் சுமார் 90,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் நுழைவு இசைவு வழங்கியுள்ளது. இது, உலக அளவில் அமெரிக்காவுக்கு படிப்பதற்காக நுழைவு இசைவு பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் 4-ல் ஒரு பங்கு என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 காலகட்டத்தில் மட்டும் 4.11 லட்சம் மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் நுழைவு இசைவு கொடுக்கப்பட்டுள்ளது. 2010-க்கு பிறகு அமெரிக்காவுக்கு நுழைவு இசைவு பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்தாண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், பல்வேறு புதிய சாதனைகளை அமெரிக்க தூதரகம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
வெள்ளி 9, மே 2025 3:31:48 PM (IST)

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு!
வெள்ளி 9, மே 2025 3:25:42 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)
