» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சைகை மொழியில் வாதம்!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:52:09 AM (IST)

செவித்திறன் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர், வழக்கு விசாரணையின்போது, சைகை மொழியில் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, வழக்குலைஞர் சஞ்திதா அய்ன், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஆச்சரியமான கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, செவிதிறன் மாற்றுத்திறனாளி சாராஹ் சன்னி ஆஜராவதால், சைகை மொழியில் வாதிட அனுமதிக்குமாறும், அவர் காணொலி வாயிலாக ஆஜராகி வாதிட அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

உடனடியாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்து, காணொலி வாயிலாக வாதிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார்.ஆர்வத்துடன் வாதிட முன் வந்த செவிதிறன் மாற்றுத்திறனாளி, சைகை மொழியில் வாதிட்டது, எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்க்கப்பட்டது. எப்போதும் வாதங்களால் சப்தங்கள் நிறைந்து காணப்படும் நீதிமன்ற அறை அன்று அமைதிக்கு சாட்சியாகக் காணப்பட்டது.

பிறகு, நீதிபதிகளும் எதிர் தரப்பினரும் கூறும் வாதங்கள், சாராஹ் சன்னிக்கு சைகை மொழியில் எடுத்துக் கூறப்பட்டது. இதனால், வழக்கு விசாரணை தாமதமாகும் என்று நினைத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. இருவரும் மாறி மாறி மிக விரைவாக வாதங்களை முன்வைத்தது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வழக்கு விசாரணையின் வேகம், அபாரமாக இருப்பதாக நீதிபதிகளே கருத்துக் கூறினர். இதன் மூலம், நீதிமன்றங்களில் அனைத்தையும் சப்தமாகத்தான் கூற வேண்டும் என்பதில்லை என்ற தகவல் நாடு முழுமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory