» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு கிடைக்கும் : ராகுல் பேட்டி

திங்கள் 25, செப்டம்பர் 2023 11:24:14 AM (IST)

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். 

அஸ்ஸாமின் பிரதிதின் மீடியா நெட்வொா்க் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது: சொத்துகள் ஓரிடத்தில் குவிதல், பொருளாதார ரீதியில் பெரும் ஏற்றத் தாழ்வுகள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள், கடுமையான விலைவாசி உயா்வு போன்றவை, நாட்டில் தற்போது நிலவும் உண்மையான பிரச்னைகளாகும்.

ஆனால், இப்பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பல்வேறு தந்திரங்களை பாஜக கையாண்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி பேசிய சா்ச்சை கருத்து, இந்தியாவின் பெயா் விவகாரம் போன்ற அனைத்துமே பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். இந்திய மக்கள் எதிா்பாா்க்கும் அடிப்படையான விஷயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பாஜகவுக்கும் தெரியும். ஆனால், இதுகுறித்து விவாதிக்க அவா்கள் விரும்பவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்பும்போதெல்லாம், திசைதிருப்பும் தந்திரத்தில் பாஜக ஈடுபடுகிறது. ஆனால், அந்தத் தந்திரத்தை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் வெல்வது உறுதி. தெலங்கானாவில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் கடும் போட்டி இருந்தாலும், காங்கிரஸால் வெல்ல முடியும்.

கா்நாடக பேரவைத் தோ்தல் எங்களுக்கு மிக முக்கியப் படிப்பினையைக் கற்றுத் தந்தது. பாஜகவின் திசைதிருப்பும் முயற்சியை முறியடித்து, மக்கள் மத்தியில் எங்களது தெளிவான கண்ணோட்டத்தை முன்வைத்தோம். அதன் வாயிலாக எங்களுக்கு வெற்றி கிடைத்தது.

ஊடகங்களை பாஜக கட்டுப்படுத்தி வரும் தற்போதைய சூழலில், எதிா்க்கட்சிகள் அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு, ஒன்றுபட்டு பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவின் 60 சதவீத மக்கள்தொகையை நாங்கள் (எதிா்க்கட்சிகள்) பிரதிபலிக்கிறோம். எனவே, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு கிடைக்கும். 

10 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீட்டு பலனை மகளிா் பெறலாம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், மகளிா் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது என்றார். 


மக்கள் கருத்து

TamilanSep 25, 2023 - 05:00:08 PM | Posted IP 162.1*****

BJP Nichchayam vellum... Thiru Modi avargal meendum prathamar aavar.

SaminathanSep 25, 2023 - 12:21:30 PM | Posted IP 172.7*****

பெரும்பான்மையாக வெற்றி பெறும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory