» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சனி 23, செப்டம்பர் 2023 5:29:11 PM (IST)



வாராணசியில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகளைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துறை அதிகாரிகள், பிசிசிஐ நிர்வாகிகள், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

30 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சுமார் 30,000 பேர் இதில் அமர முடியும். கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளது. திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப்பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory