» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை: டி.ஆர். பாலு பேச்சு
திங்கள் 18, செப்டம்பர் 2023 3:57:38 PM (IST)
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று(செப். 18) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப். 19) முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, '1962 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்புகளும் இல்லை. நாட்டில் கடும் நிதி நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் அதிக செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான இறுதி கூட்டத்தொடரை இங்கு நடத்தலாமே? நல்ல நாள், நல்ல நேரத்தைவிட, மக்களுக்கு தேவையான நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும்.
75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஜனநாயகத்திற்கு புறம்பான சில மசோதாக்களை நிறைவேற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

