» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன:பிரதமர் மோடி
திங்கள் 18, செப்டம்பர் 2023 11:35:18 AM (IST)
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்கிறோம். பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும்.
நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது. சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடரை உற்சாகமாக நடத்தி அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும்.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படவுள்ளன." இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகாவில் நாளை பந்த்: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:34:10 PM (IST)

9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க தூதரகம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:21:34 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:14:08 PM (IST)

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:42:05 PM (IST)

ம.பி.யில் விநாயகர் சிலை விஜர்சன விழாவில் சோகம்: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:49:27 AM (IST)

மணிப்பூர் போர்க்களமாக மாறியதற்கு பாஜகவே காரணம்: கார்கே குற்றச்சாட்டு!
புதன் 27, செப்டம்பர் 2023 5:17:11 PM (IST)
