» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, மார்ச் 2023 5:01:41 PM (IST)
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர்.
இரண்டாவது முறையாக கடந்த மாதம் 26ம் தேதியன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியாவை அன்று இரவு கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ காவல் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மேற்கொண்டு சிபிஐ காவலை அதிகாரிகள் கோராததால் மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் சமாதானத்தை பிரதமர் மோடி ஏற்றது தவறு: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
திங்கள் 12, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் வலுவான பதிலடி கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
ஞாயிறு 11, மே 2025 9:29:29 PM (IST)

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்!
சனி 10, மே 2025 3:47:49 PM (IST)

எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகள் முறியடிப்பு: இந்திய ராணுவம் அதிரடி
சனி 10, மே 2025 11:18:54 AM (IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!
சனி 10, மே 2025 8:47:45 AM (IST)
