» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமிதம் கொள்வோம் : பிரதமர் மோடி

சனி 28, ஜனவரி 2023 11:55:58 AM (IST)



உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், நமது இந்திய மொழிகளில் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்சா பே சர்ச்சா என்ற பெயரில் ஆண்டுதோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் டெல்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 38 லட்சம் பேர் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். 

இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். மாணவ, மாணவிகள், தங்கள் தாய் செய்யும் பணிகளை உற்றுநோக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, அதன் மூலம் நேர மேலாண்மை திறனை கற்றுக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கினார். திறமைகளை அந்தஸ்து உள்ளிட்டவற்றுடன் இணைத்து பார்க்கக்கூடாது என்றும், கற்றலில் குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என்றும் பெற்றோர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

அதேநேரத்தில், மாணவர்கள் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சில மாணவர்கள் படைப்பாற்றலை, தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர் என்று கூறிய அவர், வாழ்க்கை முழுவதும் அது பயன்படாது என்றும் தெரிவித்தார்.மேலும், கடின உழைப்பு அல்லது சாமர்த்தியம் எது அதிக பலனளிக்கும் என்று மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, சாதூர்யம் மற்றும் கடின உழைப்பு இரண்டுமே அவசியம் என்று கூறினார். ஒன்று இல்லாமல் மற்றொன்று பயனளிக்காது என்றும் விளக்கம் அளித்தார்.பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிற மொழிகளில் சில வரிகளையாவது கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். பிற மொழி பேசுபவர்களிடம் அவர்களில் மொழியில் சில வரிகள் பேசும் போது உறவு நெருக்கமாகும். பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், நமது இந்திய மொழிகளில் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory