» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் வசதிக்காக புதிய செயலி அறிமுகம்!

சனி 28, ஜனவரி 2023 11:28:21 AM (IST)

பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து  தேவஸ்தான அறங்காவர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்ததாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'Sri TT DEVAS THANAMS' எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதன் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை முன்பதிவு, திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாள்கள் குறித்த விவரங்கள், குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என ஓய்.வி. சுப்பா ரெட்டி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory