» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு: ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்!

வெள்ளி 27, ஜனவரி 2023 4:04:34 PM (IST)



ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுலின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீரில் காசிகுண்டை அடைந்த பிறகு ராகுல் காந்தி, திட்டத்தின்படி தெற்கு காஷ்மீரில் உள்ள வெசுவை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினரால் நிர்வகிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்தது. மக்கள் கூட்டம், ராகுலின் அருகருகே அலைமோதியது. பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவிய நிலையில், நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  

உரியப் பாதுகாப்பு கிடைக்கும்வரை மீண்டும் நடைப்பயணம் தொடங்கப்படாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  பாதுகாப்பை மீறியதாகவும், கூட்டத்தை நிர்வகிக்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தவறியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுலின் நடைப்பயணத்துக்கு காஷ்மீர் நிர்வாகம் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்று ஏஐசிசி நிர்வாகி ரஜினி பாட்டீல் ட்வீ‘ட் செய்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory