» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய கடல் பகுதியில் நுழைந்த சீன உளவு கப்பல்
புதன் 7, டிசம்பர் 2022 12:19:32 PM (IST)

சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த சீனா முயன்று வருகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள பிறநாடுகளுடன் இந்தியா தனது ராணுவ உறவுகளை பலப்படுத்தி வருகிறது. ஆனாலும் சீனா ராணுவ மற்றும் ஆராய்ச்சி கப்பல்கள் அவ்வப்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கடற்படை தளபதி ஹரி குமார் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் பெருகி வருவதாகவும், அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சீனாவின் 'யுவான் வாங்-5' என்கிற உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங்-5' கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாகவும், தற்போது அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதே சமயம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து இந்தியா தரப்பில் ஆதிகாரபூர்வமான எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
அதே போல் சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் வந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திட்டமிடப்படி இந்தியா ஏவுகணை சோதனையை நடத்துமா என்பதும் தெளிவாக தெரியவில்லை. முன்னதாக சீனாவின் இந்த உளவு கப்பல் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் ஒரு வார காலம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, அக்டோபர் 2025 5:05:42 PM (IST)

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம்: பிரதமர் மோடி
புதன் 15, அக்டோபர் 2025 11:05:01 AM (IST)

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)
