» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கருக்கலைப்பு குறித்து தாய் எடுக்கும் முடிவே இறுதியானது: டெல்லி உயர்நீதிமன்றம்
செவ்வாய் 6, டிசம்பர் 2022 4:36:07 PM (IST)
கருக்கலைப்பு குறித்து தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் தனது 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கருவில் உள்ள குழந்தைக்கு பெருமூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் நலன் கருதி கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவர்கள் மறுத்த போதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி இந்தியாவில் கருக்கலைப்பு குறித்து பெண் முடிவு செய்ய சட்டத்தில் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.
'கருவை கலைப்பது குறித்த கர்ப்பிணி பெண்ணின் உரிமை உலகம் முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது. கருக்கலைப்பு விவகாரத்தில் தாய் எடுக்கும் முடிவே இறுதியானது. ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும்.
ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாளா என்ற இறுதித் தேர்வு அந்தப் பெண்ணிடமே உள்ளது. இதனை சட்டத்தின் மூலமாக அங்கீகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுபோல கருக்கலைப்புக்கு மருத்துவக்குழுவின் கருத்தும் முக்கியமானதுதான். குழந்தையின் நலன் கருதி இந்த கருத்துகள் விரிவானதாக இருக்க வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் தரமான அறிக்கைகளுடன் வேகமும் முக்கியம்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
