» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டயரில் பதுக்கிய ரூ.93 லட்சம் பாஜகவினரின் ஹவாலா பணம்: மம்மா குற்றச்சாட்டு!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 11:19:31 AM (IST)

ஜல்பைகுரி மாவட்டத்தில் காரில் ரூ.94லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்த வாகனச் சோதனையின்போது, ஒரு காரை சோதனை செய்த போது, அந்த காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வந்து அதனை சோதித்த போது, அதற்குள் ரூ.93,93,000 பணம் இருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பிகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

டயரை காவல்துறையினர் துண்டித்துப் பார்த்த போது அதில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக போலீஸார் கூறுகிறார்கள். இந்த பணம் எப்படி வந்தது என்று 5பேரும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிகாரிலிருந்து அசாமுக்கு காரில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் இருந்ததால், வங்கியின் உதவியோடு பணம் எண்ணப்பட்டது. 

அப்போதுதான் அதில் 93 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டபோது, எல்லா பணமும் பாஜகவிடமிருந்துதான் வருகிறது. தற்போது அதிகபட்சமாக பணம் குண்டர்களுக்கும் துப்பாக்கிகளுக்குமே ஆகிறது. அவர்கள் மத்தியப் படை பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கூட விசாரிக்க முடியாது. இவற்றையெல்லம் பார்த்துக் கொள்ளுமாறு பாஜக தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் அரசியல் ரீதியாக போராடுவோம், வன்முறை வழியில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory