» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜி - 20 அனைத்து கட்சி கூட்டம்: மு.க. ஸ்டாலின் உட்பட மாநில முதல்வர்கள் பங்கேற்பு
செவ்வாய் 6, டிசம்பர் 2022 10:20:33 AM (IST)

ஜி - 20 அமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு, அடுத்தாண்டு செப்டம்பரில் புதுடில்லியில் நடக்க உள்ளது. மாநாடு மற்றும் முன்னேற்பாடு கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழ முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்க், மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றனர்.புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியுஷ் கோயல் ஆகியோரும் பங்கேற்றனர். அடுத்த ஒரு ஆண்டில் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, பா.ஜ., தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், நாடு முழுதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா, ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்,'' என குறிப்பிட்டார். தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையே உள்ள கலாசார உறவை விளக்கும் வகையில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுதும் நடத்திட பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
