» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியை சதாம் உசேனுடன் ஒப்பிடுவதா? - அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் கண்டனம்!

வியாழன் 24, நவம்பர் 2022 10:17:16 AM (IST)

ராகுல்காந்தியின் தோற்றத்தை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்ட அசாம் முதல் அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் நீடித்து, பின்னர் மகாராஷ்டிராவிற்கு சென்றது. அதன்பின், நேற்று 77-வது நாளில் மத்திய பிரதேசத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

இதற்கிடையே, அசாம் முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, ராகுல் காந்தியின் முகம் மாறியுள்ளது. உங்களது தோற்றத்தினை மாற்றவேண்டும் என நீங்கள் விரும்பினால், வல்லபாய் பட்டேல் அல்லது ஜவகர்லால் நேரு போல் மாற்றுங்கள். காந்திஜி போன்று கூட நீங்கள் நன்றாக தோற்றமளிப்பீர்கள். ஆனால், சதாம் உசேனைப் போன்று தற்போது காணப்படுகிறீர்கள். இதுவே காங்கிரஸ் தலைவர்களின் பழக்க வழக்கங்கள், இந்திய கலாசாரத்துடன் நெருங்கிய வகையில் இல்லாமல் இருப்பதற்கு காரணம். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கலாசாரங்களை தத்தெடுத்து கொள்ள முயற்சிக்கின்றனர் என பேசியுள்ளார்.

இந்நிலையில், அசாம் முதல் அமைச்சர் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காங்கிரசின் சந்தீப் தீட்சித் கூறுகையில், பாதயாத்திரையால் அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த அளவுக்கு அவர்கள் தாழ்ந்து போவார்கள் என நினைக்கவில்லை. உங்களது தலைவர் (பிரதமர் மோடி) தாடி வளர்க்கும்போது, நாங்கள் எதுவும் கூறவில்லை. நாங்கள் உண்மையான விவகாரங்களைப் பற்றி பேசுகிறோம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory