» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாய் தந்தை உட்பட குடும்பத்தில் 4 பேரை குத்திக் கொன்ற வாலிபர் : டெல்லியில் பயங்கரம்!

புதன் 23, நவம்பர் 2022 12:05:31 PM (IST)

டெல்லியில் தாய், தந்தை, சகோதரி உட்பட குடும்பத்தில் 4பேரை குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் தரை பகுதியில் ஒரு பெண், குளியறையில் 2 பேர் உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. உடல்களை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த கேசவ்(25) என்ற வாலிபர் தனது தந்தை தினேஷ்(50), தாய் தர்சனா, மற்றும் பாட்டி தீவானா தேவி(75), தங்கை ஊர்வசி(18) ஆகியோரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது கண்டு பிடிக்கப்பட்டது.

கொலையாளி கேசவ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு தான் கேசவ் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று இரவும் கேசவ் தனது குடும்பத்தினருடன் மீண்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கேசவ்  தனது தந்தை உள்பட குடும்பத்தினர் 4 பேரையும் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கேசவை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory