» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 4, ஜூலை 2022 10:28:50 AM (IST)

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் பயணம் செய்த ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு ஒரு கும்பல், சில பெட்டிகளுக்கு தீவைத்தது. இதில் 59 கரசேவகர்கள் தீயில் கருகி பலியானார்கள். குஜராத்தில் கலவரம் வெடிக்க இச்சம்பவமே காரணமாக அமைந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 34 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேலும் ஒருவருக்கு கோத்ரா கூடுதல் செசன்ஸ்  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ரயில் எரிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ரபீக் பாதுக் என்பவர்,  தலைமறைவாக இருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மீது வழக்கு விசாரணை நடந்தது. அதில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory