» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்

வியாழன் 26, மே 2022 10:24:46 AM (IST)

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அம்ரீனா பட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீர் தொலைக்காட்சி கலைஞர் அம்ரீனா பட் (35) நேற்று இரவு 8 மணியளவில் மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் உள்ள ஹுஷ்ரூவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அவரையும் 10 வயது மருமகன் ஃபர்ஹானையும் சுட்டுள்ளனர். 

படுகாயம் அடைந்த இருவரும் சதுராவில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அம்ரீனா பட் உயிரிழந்தார். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 லஷ்கர் பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்தனர். அம்ரீனா டிக்டோக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பிரபலமானார். 

இந்த கொலைக்கு  காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில், "தீவிரவாதிகளின் தாக்குதலால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் ஏற்பட்டுள்ளது... அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை இப்படி தாக்குவதை எந்த விதத்தாலும் நியாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார். இவரைப் போலவே பல தலைவர்களும் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory