» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாபில் ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் கைது: பகவந்த் மான் நடவடிக்கை - கெஜ்ரிவால் பாராட்டு!

புதன் 25, மே 2022 12:37:22 PM (IST)

பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில முதல்வருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பகவந்த் மான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமை கொள்கிறது.

மக்கள் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் குழப்படைந்தனர். ஊழல் இல்லாமல் ஒரு கட்சி எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் நம்மை தியாகம் செய்யலாம். ஆனால் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory