» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு!!

திங்கள் 17, ஜனவரி 2022 11:35:54 AM (IST)

கேரளாவில் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது அய்மனானம் கிராமம். இங்கு வசிக்கும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன். நேற்று காலை ஒரு விற்பனையாளரிடம் இருந்து  கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார். சில மணி நேரங்கள் கழித்து  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலில் சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்தது.   

சதானந்தன் இது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:  கடந்த 50 ஆண்டுகளாக பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றேன். செல்வனிடம் (லாட்டரி விற்பனையாளர்) பரிசு பெற்ற சீட்டை வாங்கினேன். இந்தத் பரிசுத் தொகையை  குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த பயன்படுத்துவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

adaminJan 17, 2022 - 12:19:46 PM | Posted IP 173.2*****

semma sirey

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory