» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய அரசு

திங்கள் 17, ஜனவரி 2022 11:01:44 AM (IST)

தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களில் இடங்களில் காண்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றை கருத்தில் கொண்டே பொதுமக்கள் நலன் கருத்தி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பத்திரிக்கை, சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி உள்பட பல்வேறு வழிமுறைகள் மூலம்  நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.  ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. எந்த வித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் மத்திய அரசு விதிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory