» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அவைக்கு வராவிட்டால் மாற்றங்கள் வந்து சேரும்: பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

புதன் 8, டிசம்பர் 2021 12:15:18 PM (IST)

பா.ஜ.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தவறாமல் வரவேண்டும். இல்லையென்றால் உரிய நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பாஜக உறுப்பினர்கள் பலர் அவைக்கு ஒழுங்காக வருவதில்லை. இப்பொழுது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாஜக எம்பிக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளத் தவறும் எம்பிக்கள் உரிய நேரத்தில் மாற்றத்துக்கு ஆட்படுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சி தனது எம்பிக்களின் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கூட்டத்தில் பாரதிய ஜனத ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டங்களை தவறாது கலந்துகொள்ள வேண்டும். தங்கள் தொகுதிகளில் அவர்கள் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் இதன் மூலம் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் சுலபமாக அணுக முடியும் என்று பிரதமர் கூறியதாக மத்திய நாடாளுமன்ற அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory