» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதன் 8, டிசம்பர் 2021 10:52:35 AM (IST)
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டமானது மும்பையில் நடைபெற்றது. கடந்த 8 முறை வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ்," வங்கிகளுக்கான ரெப்போ குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக தொடரும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகமாக இருந்த வேலையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்க மே 2020-ல் கடைசியாக ரிசர்வ் வங்கி தனது வட்டியை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை: அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:49:45 AM (IST)

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

