» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை

வெள்ளி 15, அக்டோபர் 2021 3:17:33 PM (IST)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்னேறி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 12-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுச் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது. 13-ம் தேதி மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான  ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

மன்மோகன் சிங் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படங்கள் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து சில செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் 89 வயதாகும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலை தேறிவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory