» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து!

வியாழன் 14, அக்டோபர் 2021 11:57:39 AM (IST)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 89), கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணம் அடைந்தார்.  இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காய்ச்சலாலும், உடல் சோர்வாலும் அவதியுற்று வந்துள்ளார். 

இதையடுத்து அவர் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory