» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு: 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 5:28:49 PM (IST)



மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தின. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. பல்வெறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. திரையரங்குகளில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநில அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory