» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு அக்.1-ல் பள்ளிகள் திறப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு
வியாழன் 23, செப்டம்பர் 2021 10:43:50 AM (IST)
கேரளாவில் 1-ம் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ம் தேதி முதல், 1 முதல் 7 வரை மற்றும் 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்படும். 15-ம் தேதி முதல் மற்ற வகுப்புகள் ஆரம்பமாகும். இதையொட்டி பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.
வியாபார நிறுவனங்கள், பொது இடங்களில் சிலர் முக கவசம் அணியாமல் இருப்பது தெரிய வந்தால் தண்டிக்கப்படுவார்கள். கேரளாவில் இதுவரை 3.44 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 24 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்து கொள்ளவில்லை. கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 65 வயதிற்கு மேலானவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதவிடாய் கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 13, மார்ச் 2026 5:00:23 PM (IST)

தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)

ஜம்முவில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு முயற்சி - முதியவர் கைது!
வெள்ளி 13, மார்ச் 2026 8:49:29 AM (IST)

மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!
வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)

கேரளம் பெயர் மாற்றம் மகிழ்ச்சியான தருணம் : கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 11, மார்ச் 2026 5:10:36 PM (IST)

கோமா நிலையில் உள்ள இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதன் 11, மார்ச் 2026 12:26:18 PM (IST)

